posted Apr 28, 2014, 2:29 AM by வாடா மல்லிகை
[
updated Apr 28, 2014, 2:29 AM
]
இன்னுமொரு....., இளமைக்காலத்துக்கு, என்னை அழைத்துச் செல்கிறது, உனது அரிதாரம் பூசாத அழகு!
அகல விரிந்த கண்களும், அப்போது தான், முகிழ் திறக்கின்ற, மலரொன்றின் இதழ்களாய், உனது உதடுகளும், மான் ஒன்றை அபிநயம், பிடிக்கின்ற உனது, விரல்களின் நளினமும்...., மாரீச மாய மானாகி, என்னை ஏமாற்றுகின்றன!