தண்டி யாத்திரையின் போது, சிந்திய இரத்தத் துளிகள்....! ஜூலியன் வாலாவில், சிற்றாறாகி ஓடியது! வெள்ளையனை, வீட்டுக்கு அனுப்பிய, வெற்றிக் கொண்டாட்டம், கலைந்து போக முன்னே....! உள்ளூர் அரசியல்வாதி, ஊரைச் சுரண்ட, ஆரம்பித்து விட்டான்! உலகத்தின், இரகசிய வங்கி கணக்குகளின், வைப்புக்களில், உனது அரசியல் வாதிகள், அள்ளிச் சுரண்டிய சேமிப்பு, உனது தேசம் பட்ட கடனை விட, பன்னிரண்டு மடங்காம்! இந்தத் தாயின் பங்கும், அந்தச் சேமிப்புக்களுக்குள், நிச்சயம் புதைந்திருக்கும்! |
குறுங்கவிதைகள் >