எருமை மாடு !

posted Apr 28, 2014, 2:47 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:47 AM ]
டேய், எருமை மாடே....!

திரும்பிப் பார்த்தேன்,
ஒரு வேளை,
எருமை மாடும்,
என்னோடு வந்து விட்டதோ?

வாத்தியார் என்னைத் தான்,
வரவேற்றிருக்கிறார் !

நீயெல்லாம்,
எருமை மாடு மேய்க்கத்தான் சரி..!

வாத்தியார் முடிவாகச் சொன்னார்!

மனத்துள் எங்கோ,
சுள்ளென்று வலித்தது! 

வாத்தியார் முகத்தில்,
காறித்துப்ப வேண்டுமென,
அன்றிலிருந்து,
எனக்குள் ஒரு ஆவேசம்!

அன்றைய ஆவேசத்தில்,
இன்று நானும் ஒரு மனிதனாக...!

வாத்தியார் உயிரோடிருந்தால்,
அவர் வாய்க்குக் கட்டாயம்,
சர்க்கரை போட வேண்டும்!

Comments