கார் காலம்

posted Apr 28, 2014, 2:36 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:37 AM ]
கார்கால மேகங்களின்,
கருக்கட்டல் காண்கையில்,
கானகத்து மயில்களின் தோகைகள்,
தாமாகவே நர்த்தனமாடும்!

ஒரு நடன மங்கையின்,
பழக்கப்பட்ட பாதங்களைப்போல!

ஒரு இசை மேதையின்,
தாளம் போடும் விரல்களைப் போல!

Comments