குளிசைகள்

posted Apr 28, 2014, 2:44 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:44 AM ]
சூளைச் சுண்ணாம்பைக் கூட,
செமித்துத் தள்ளின,
எனது பாட்டனாரின்,
சமிபாட்டு உறுப்புகள்! 

பரியாரி கொடுத்த,
வெறும் கோரோசனைக், 
குளுசைகளும்,
வாட்டியெடுத்த,
ஆடாதோடை இலைகளும்,
அவரது வருத்தங்களைத்,
தள்ளி வைத்தன!

இன்றோ.....!

வண்ணங்களும், 
வடிவங்களும்,
கொண்ட குளுசைகளுடன்,
முக்கலும் முனகலுமாக,
வாழ்வு நகர்கிறது!

மனிதக் கழிவுகளைக்,
கடந்து போகின்ற,
மண்புழுக்கள் கூட,
விலத்திச் செல்கின்றன!

Comments