தலை முறை

posted Apr 28, 2014, 2:35 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:35 AM ]
கதிரவன் கண் விழிக்கையில்,
கண் முன்னே நிற்கின்றன,
கணக்கு முடிந்து போய் விட்ட,
தென்னை மரங்கள்!

அவற்றின் அந்திய வாழ்வின்,
இனிய அத்தியாயங்களை,
அவற்றையும் மேவி வளர்கின்ற,
இளைய தலைமுறை,
நாளைய தலைமுறைக்குச்,
சொல்லிச் செல்லும்!


Comments