வாக்களிப்பு

posted Apr 28, 2014, 2:07 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:07 AM ]
பாட்டிக்கு வயசு,
தொண்ணூறுக்கும் அதிகம்!

பேரன்கள் இருவர்..!

இருவருமே,
பாட்டியின் வாக்குக்காகப்,
பணம் பெற்றுக்கொண்டவர்கள் !

தேர்தல் தினத்தில்....!

மூத்தவன்,
பாட்டியைத் தோளில் சுமந்து,
வாக்களிக்கச் சென்றான்!

இளையவனுக்குக் கோபம்..!
வாக்களிப்பு நிலையத்தில்,
தூசு கிளப்பினான்!

போலிஸ் வந்தது..!

பாட்டியைத் தூக்கி,
உள்ளே சென்றது..!

வெளியே வந்ததும்,
பாட்டியிடம் கேள்வி..!

யாருக்கு வாக்களித்தாய்?

பாட்டி,
பொக்கைவாயால் சிரித்தபடி,
சொன்னது....!

நோட்டா...!

Comments